மேலும் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்தகூலி தொழிலாளி பலி
18-Apr-2025
சேந்தமங்கலம்:கொல்லிமலை, சேலுார் நாடு பஞ்., சோளக்கிராய்பட்டியை சேர்ந்த முத்துசாமி மகன் ஜீவா, 22; இவர், நாமக்கல் அருகே உள்ள தனியார் கல்லுாரியில், இ.சி.இ., இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று மதியம், ஜீவா மற்றும் அவரது நண்பர்கள் ரஞ்சித், 22, தினேஷ்குமார், 21, பேரரசு, 21, கவின்குமார், 21, ஆகியோர் சேர்ந்து, முத்துக்காப்பட்டி அருகே, புதுக்கோம்பையில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றனர்.இதில், ஜீவாவிற்கு நீச்சல் தெரியாததால், கிணற்றின் படிக்கட்டில் அமர்ந்து குளித்துள்ளார். அப்போது, தடுமாறி கிணற்றில் விழுந்த ஜீவா, நீரில் தத்தளித்துள்ளார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால், ஜீவா தண்ணீரில் மூழ்கினார். தகவலறிந்து வந்த சேந்தமங்கலம் போலீசார், நாமக்கல் தீயணைப்பு துறையினர், கிணற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின், மாணவர் ஜீவாவை சடலமாக மீட்டனர். இச்சம்பவம், அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
18-Apr-2025