உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பருத்தி விளைச்சல் குறைவால் கவலை

பருத்தி விளைச்சல் குறைவால் கவலை

வெண்ணந்துார்;வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் பரவலாக பருத்தி சாகுபடி செய்துள்ளனர். பலர் மானாவாரி பயிராகவும், கிணற்று பாசனம் கொண்டும் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். விளைச்சல் ஓரளவு இருந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழையால், பருத்தி காய் வெடிப்பு குறைந்தது. சொத்தை அதிகமானதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன், ஒரு குவிண்டால் பருத்தி, 14,000 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில், தற்போது, 9,000 ரூபாயை தாண்டவில்லை. விளைச்சலும் குறைந்துள்ளது. இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, பருத்திக்கு ஏற்ற விலையை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை