உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மத்திய அரசை கண்டித்துகாங்., கட்சி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்துகாங்., கட்சி ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை முடக்க நினைக்கும், மத்திய பா.ஜ., அரசை கண்டித்து, நாமக்கல்லில் காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல்-மோகனுார் சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் கிழக்கு மாவட்ட காங்., கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வைத்தார். நகர தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். அதில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை முடக்க நினைக்கும், மத்திய பா.ஜ., அரசு மற்றும் அமலாக்க துறையை கண்டித்தும், சோனியா, ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதில், 100க்கும் மேற்பட்ட காங்., கட்சியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை