உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: வக்ப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரியும், தமிழகத்-திற்கு வழங்க வேண்டிய மத்திய அரசு நிதியை வழங்கக்கோ-ரியும், கிழக்கு மாவட்ட காங்., சார்பில், நாமக்கல்லில் கருப்புக்-கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். நகர தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த வக்ப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்-பப்பெற வேண்டும். தமிழகத்திற்கு, மத்திய அரசு வழங்க வேண்-டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.பள்ளிகளில் பிறமொழி திணிப்பை கைவிட வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்-பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முன்னாள் மாவட்ட தலைவர் சீனிவாசன், முன்னாள் டவுன் பஞ்., தலைவர்கள் சிங்காரம், சீனிவாசன், ராசிபுரம் சட்டசபை தொகுதி அமைப்பாளர் அன்பரசு, மாவட்ட, நகர, டவுன் பஞ்., நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ