உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.கோட்டில் காங்., பொதுக்கூட்டம்

தி.கோட்டில் காங்., பொதுக்கூட்டம்

திருச்செங்கோடு, நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்பை காப்போம் என்ற பிரசார இயக்கத்தை, காங்., கட்சி மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று நாமக்கல் மேற்கு மாவட்ட காங்., கமிட்டி சார்பில், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.நாமக்கல் மேற்கு மாவட்ட காங்., கமிட்டி தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் குமரி மகாதேவன் கூறுகையில்,'' சமத்துவ சமுதாயம், ஏற்றத்தாழ்வற்ற சமூக நிலை, சமூக பொருளாதார அடிப்படையில் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும். சட்ட மேதைகளால், சுதந்திர போராட்ட தியாகிகளால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பை சிதைத்து வரும், மத்திய அரசின் மறைமுக திட்டங்களை, மக்களுக்கு தெரியப்படுத்தி அரசியலமைப்பை காக்க வேண்டிய பொறுப்பு காங்., கட்சிக்கு உள்ளது,'' என்றார்.மாவட்ட பொருளாளர் பொன்னு சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ஜெகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை