மேலும் செய்திகள்
ரூ.50 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
25-Jun-2025
திருச்செங்கோடு, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு, ராயர்பாளையம், வெள்ளிக்குட்டை, பல்லக்காபாளையம், கொடுமுடி, குமாரபாளையம் உள்ளிட்ட சுற்று பகுதிகளில் இருந்து, 7,184 கிலோ பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில், பருத்தி பி.டி., ரகம் குவிண்டால், 7,109 ரூபாய் முதல், 7,656 ரூபாய் என, மொத்தம், 5 லட்சத்து, 31,000 ரூபாய்க்கு விற்பனையானது.இதேபோல், அரூர், ஊத்தங்கரை, தலைவாசல், சங்ககிரி, ஈரோடு, தங்காயூர், கணக்கம்பாளையம், வீரகனுார், ஆத்துார் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், கருப்பு எள் கிலோ, 86.80 ரூபாய் முதல், 123 ரூபாய் வரையும்; வெள்ளை எள், 78 ரூபாய் முதல், 94.50 ரூபாய், சிகப்பு எள், 70 ரூபாய் முதல், 114.90 ரூபாய் என, 60 மூட்டை எள், மூன்று லட்சத்து, 35,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
25-Jun-2025