உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர்கள் மோதி தம்பதியர் படுகாயம்

டூவீலர்கள் மோதி தம்பதியர் படுகாயம்

குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, பச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 61; கூலித்தொழிலாளி. இவரும், இவரது மனைவியும், டி.வி.எஸ்., மொபட்டில், செங்கமா முனியப்பன் கோவில் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்த, 'ஹோண்டா ஆக்டிவா' டூவீலர், இவர்களின் மொபட் மீது மோதியது. இதில், தம்பதியர் பலத்த காயமடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள், அவர்களை மீட்டு இடைப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான பேக்கரி மாஸ்டர் வேடல் ஹலாம், 35, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி