உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாடு பூ தாண்டும் விழா

மாடு பூ தாண்டும் விழா

ராசிபுரம்: பொங்கல் பண்டிகையையொட்டி, ராசிபுரம் அடுத்த தொட்டிய-பட்டி கிராமத்தில், மாடு பூ தாண்டும் விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு பூ தாண்டும் விழா, நேற்று மாலை நடந்தது. சுற்று-வட்டார பகுதிகளான போடிநாயக்கன்பட்டி, மஞ்சநாயக்கனுார், தம்மநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி, கருங்கல்பாளையம், குள்-ளப்பநாயக்கனுார், பெரியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கோவில் மாடுகள் கலந்துகொண்டன.மேளதாளம் முழங்க, மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்து, இறுதியாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின், சிறப்பு பூஜை செய்து, கோவில் முன் பூ போட்டனர். குறிப்பிட்ட எல்லையில் இருந்து மாடுகளை அவிழ்த்துவிட்டனர். முதலில் பூ தாண்டிய மாடுகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதன்படி, மஞ்ச-நாயக்கனுார் கோவில் மாடு முதல் பரிசு பெற்றது. மாடுகளையும், ஊர் பெரியவர்களையும் கவுரவித்தனர். ஏராளமான பொதுமக்கள் விழாவை ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை