உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சரக்கு ஆட்டோவில் கம்பிகளால் அபாயம்

சரக்கு ஆட்டோவில் கம்பிகளால் அபாயம்

சரக்கு ஆட்டோவில் கம்பிகளால் அபாயம்எருமப்பட்டி, நவ. 28-எருமப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வீடு, வணிக வளாகம், கட்டடங்கள் கட்ட சரக்கு ஆட்டோக்களில் கான்கிரீட் கம்பிகள் எடுத்து செல்கின்றனர். அவ்வாறு கொண்டு செல்லப்படும் கம்பிகள், சரக்கு ஆட்டோவின் முன்னும், பின்னும் நீட்டியபடி உள்ளன. இதில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடும் விதமாக சிவப்பு நிற துணியை கூட கட்டாமல் அலட்சியமாக உள்ளனர். துறையூர் சாலை, கஸ்துாரிப்பட்டி சாலைகளில், இரவில் இதுபோல் எடுத்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அஜாக்கிரதையாக, கம்பிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ