மேலும் செய்திகள்
மாற்று கட்சியினர் த.வெ.க.,வில் ஐக்கியம்
20 hour(s) ago
உழவர் சந்தையில் 58 டன் காய்கறி ரூ.24.29 லட்சத்திற்கு விற்பனை
20 hour(s) ago
இயற்கையை காக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
21 hour(s) ago
நாமக்கல்: விவசாய முன்னேறக்கழக நிறுவன தலைவர் செல்ல ராசாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர், முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பி உள்ளனர்.மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் தற்போது, பல்வேறு மாவட்டங்களில், மிகக் கடுமையான வறட்சி நிலவுகிறது. தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக, பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் வறட்சியான மாவட்டங்களாக அறிவித்து, ஒரு ஏக்கருக்கு, 50,000 ரூபாய் வீதம் வறட்சி நிவரணமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் இந்தாண்டு, தென்மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவமழையும் மிக மிக குறைவாக பதிவாகியுள்ளது.ஒரு புறம் வறட்சியிலும், ஒரு புறம் மழையாலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், கூட்டுறவு வங்கியிலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலும், தனியாரிடமும் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இந்த கோடை காலத்தை பயன்படுத்தி ஏரி, குளம், குட்டைகளில் துார்வாருவதற்கு உடனடியாக நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
20 hour(s) ago
20 hour(s) ago
21 hour(s) ago