உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் அழைப்பு

துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் அழைப்பு

நாமக்கல், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு, தமிழ்நாடு துணை முதல்வரும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி அரசு நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று மாலை, 6:00 மணியளவில் கரூரில் இருந்து நாமக்கல் வருகை தர உள்ளார். அப்போது, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தின் எல்லையான ராசாம்பாளையம் சுங்கச்சாவடி அருகில் மற்றும் கோஸ்டல் ரெசிடென்சி ஹோட்டலில் இருந்து, சுற்றுலா மாளிகை வரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது.இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கிளை, வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், பிஎல்ஏ 2 நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொண்டு வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திட வேண்டும்.இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ.,வும், மாவட்ட துணை செயலாளருமான பொன்னுசாமி, நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், முன்னாள் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை