உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.மு.க.,விற்கு பாடம் புகட்ட வேண்டும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பேச்சு

தி.மு.க.,விற்கு பாடம் புகட்ட வேண்டும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பேச்சு

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், அ.தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவாக வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட மாணவரணி செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். மல்லசமுத்திரம் டவுன் பஞ்., செயலாளர் சுந்தரராஜன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சரோஜா, ப.வேலுார் எம்.எல்.ஏ., சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., பொன் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி பேசியதாவது: வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடத்த தகுதியான இயக்கம், அ.தி.மு.க., மட்டுமே. கருணாநிதி டாக்டர் பட்டம் வேண்டும் என்பதற்காக, சிதம்பரம் பல்கலை மாணவர் உதயகுமாரை சித்ரவதையாக்கி டாக்டர் பட்டம் பெற்றவர். இவர்கள் வீரவணக்கம் நடத்த தகுதியற்றவர்கள். ரவுடி ராஜ்ஜியம் நடத்துவது தான் தி.மு.க., ஸ்டாலின், டில்லியில் நடக்கும், 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில், பீஹார் முதல்வர் ஹிந்தியில் பேசுகிறார். ஸ்டாலினோடு இருக்கின்ற எம்.பி., டி.ஆர்.பாலு, இந்தி தெரியாது ஆங்கிலத்தில் மொழி பெயருங்கள் என்று கூறுகிறார். 'ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் எழுந்து வெளியே செல்லுங்கள்' என, கூறியதும், அமைதியாக இருந்துவிட்டனர். மூன்றாண்டு காலம் தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.வருங்காலத்தில், தி.மு.க.,விற்கு தக்க பாடம் புகட்டவேண்டும் என்றால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளரை வெற்றிபெற செய்வதன் மூலமாக, தமிழத்தின் உரிமை பாதுகாக்கப்படும். மக்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி