வாக்கிங் சென்ற ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ.,யை கடித்த நாய்
ராசிபுரம், ராசிபுரத்தை சேர்ந்தவர் அன்பில் ராஜ், 60; ஓய்வு எஸ்.எஸ்.ஐ., இவர், தினமும் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று அதிகாலை, வழக்கம்போல் ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து முத்துகாளிப்பட்டி பகுதி வரை வாக்கிங் சென்றார். கோரைக்காடு அருகே சென்றபோது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று அவரை கடித்தது. இதையடுத்து, சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவனையில் சேர்ந்தார். அவருக்கு நாய்கடிக்கான தடுப்பூசி போட்டு சிகிச்சை அளித்தனர். ராசிபுரத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நாய் கடி சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.