மின்வாரிய பணியாளர் மின்சாரம் தாக்கி பலி
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, சிங்களகோம்பையை சேர்ந்தவர் கார்த்திக், 23; இவர், கலங்காணியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கலங்கானியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டது. அதை சரி செய்வதற்காக, கார்த்திக் அங்குள்ள மின்மாற்றியில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு, மின் கம்பத்தில் ஏரி மின் கம்பிகளை பழுது பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென கார்த்திக் மீது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.