உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மழைக்காலத்தில் மின் சாதனங்களை கையாள மின்வாரியம் விழிப்புணர்வு

மழைக்காலத்தில் மின் சாதனங்களை கையாள மின்வாரியம் விழிப்புணர்வு

ராசிபுரம்: ராசிபுரம் மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிட்ட செய்திக்-குறிப்பு:வீட்டில் உள்ள மின் சுவிட்சுகளை, 'ஆன்' செய்யும்போது கவ-னமாக இருக்க வேண்டும். ஈரமான கைகளில் தொட வேண்டாம். வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால், மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்க கூடாது.வீடுகள், கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். நீரில் நனைந்த பேன், லைட் உள்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம். வீட்டில் மின்சாரம் இல்லை என்றால், அருகில் இருந்து தாங்க-ளாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம்.மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்க கூடாது. மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.சாலைகளில், தெருக்களில் மின்கம்பங்கள் மற்றும் மின் சாத-னங்களுக்கு அருகே தேங்கி கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ விளையாடுவதோ கூடாது. தாழ்வாக தொங்கி கொண்-டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவ-தையும் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை