ஈ.வெ.ரா., நினைவு தினம்
திருச்செங்கோடு: ஈ.வெ.ரா.,வின், 51வது நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில், திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு, நகர தி.மு.க., செயலாளர் கார்த்திகேயன் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* இதேபோல், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நாமக்கல் தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.