உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

குமாரபாளையம், மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஆண்டுதோறும் ஜூலை முதல் ஜன., மாதம் வரை நெல் நடவு பாசனத்திற்காக மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடகா அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால், மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால், மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் பாசன விவசாயிகள், வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று, குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி பகுதியில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் வந்ததையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை