கொப்பரை விலை சரிவு விவசாயிகள் கவலை
சேந்தமங்கலம் :சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை அடிவார பகுதியான வாழவந்தி, கோம்பை, நடுக்கோம்பை, பொம்மசமுத்திரம், பள்ளம்பாறை, காளப்பநாயக்கன்பட்டி, வெண்டாங்கி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தென்னை மரங்கள் வளர்த்து வருகின்றனர். கொல்லிமலை அடிவார பகுதி என்பதால், இங்கு விளையும் தேங்காய் பருப்புகள் அடர்த்தியாகவும், எண்ணெய் பசை அதிகமாகவும் இருக்கும். இதனால், வெளிமாவட்ட வியாபாரிகள் இங்கு வந்து தேங்காய் கொப்பரைகளை வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம், கொப்பரை கிலோ, 230 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது மேலும், 10 ரூபாய் குறைத்து, ஒரு கிலோ, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.