மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
16-Oct-2024
உயிரிழந்த விவசாயிகுடும்பத்துக்கு நிதி உதவிஎலச்சிபாளையம், அக். 16-கொன்னையார் கிராமத்தில், திருமணிமுத்தாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த விவசாயிக்கு ஆவின் நிறுவனம் நிதி உதவி வழங்கியுள்ளது. எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி, 64. இவர், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், பால் ஊற்றுவதற்காக திருமணிமுத்தாறு தரைப்பாலத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு, திருச்செங்கோடு ஆவின்பால் சேகரிப்பு அலுவலகம் சார்பில், ஈம்ச்சடங்கிற்கு, 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், அவரது குடும்பத்தாருக்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது எனவும், அந்நிறுவன மேலாளர் முத்துவேல் தெரிவித்தார்.
16-Oct-2024