உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோழிப்பண்ணையால் ஈக்கள் தொல்லை

கோழிப்பண்ணையால் ஈக்கள் தொல்லை

நாமக்கல், திருச்செங்கோடு, கட்டிப்பாளையத்தில் செயல்படும் கோழிப்பண்ணைகளால், அப்பகுதி முழுவதும் ஈ தொல்லை அதிகரித்துள்ளதாகவும், அதற்குரிய மருந்து தெளிக்க வேண்டும் என, நாமக்கல் கலெக்டரிடம், மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செங்கோடு தாலுகா, மரப்பரை கிராமம் அடுத்த கட்டிபாளையம் பகுதியில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றோம். எங்கள் ஊரை சுற்றிலும், 20க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. அதனால் ஊர் முழுவதும் ஈக்கள் அதிகரித்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. தண்ணீர் மற்றும் உணவு பொருட்களில் மொய்க்கும் ஈக்களால் குழந்தைகள், முதியவர்கள் எளிதில் நோய்வாய்ப்படுகின்றனர். எனவே, ஈக்கள் வராமல் தடுக்கும் வகையில் அனைத்து வீடுகளுக்கும் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை