உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓட்டல்களில் உணவு தயாரிப்பு அதிகாரிகள் கண்காணிப்பு அவசியம்

ஓட்டல்களில் உணவு தயாரிப்பு அதிகாரிகள் கண்காணிப்பு அவசியம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில், வெப்படை, ஆவத்திபாளையம், காவேரி, கொக்கராயன்பேட்டை, அண்ணாநகர், அக்ரஹாரம் பகுதியில் நுாற்பாலை, விசைத்தறிக்கூடங்கள் அதிகம் செயல்பட்டு வருகின்-றன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்-றனர், அவர்களை மையப்படுத்தி, அதிகப்படியான உணவ-கங்கள் பரவலாக செயல்படுகின்றன. அங்கு, அசைவ உணவு-களே பெருமளவு தயாரிக்கப்படுகிறது.ஒரு சில கடைகளில், அசைவ உணவு தயாரிப்புக்கான மூலப்பொ-ருட்கள் சுத்தமானதாகவும், தரமானதாகவும் இருப்பதில்லை. இதை சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல், தரமற்ற உணவு குறித்து புகார் தெரிவிக்கும் வகையிலும், பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு அறிவிப்புகளும் எங்கேயும் இல்லை.இதனால், புகார் தெரிவிக்க நினைத்தாலும், அதற்கான புகார் எண், வழிமுறைகள் இல்லாததால், பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வழியில்லாமல் போய்விடுகிறது. எனவே, சம்பந்தப்-பட்ட அதிகாரிகள், ஓட்டல்களில் உணவு தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து, விதிமீறல் கடைகளை கண்டறிந்து கடும் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ