உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் இடமாற்றம்

அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் இடமாற்றம்

நாமக்கல், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி முதல்வராக பணியாற்றி வந்தவர் கோவிந்தராசு. இவர் கடந்த, இரண்டு ஆண்டாக அப்பணியில் இருந்தார். அவர், தற்போது இடமாறுதல் செய்யப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு கலை கல்லுாரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு, முதல்வர் பணியில் இருந்த மாதவி, நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உயர்கல்வித்துறை செயலாளர் சங்கர் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !