உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பணம் பறிக்க முயற்சிவாலிபர் மீது குண்டாஸ்

பணம் பறிக்க முயற்சிவாலிபர் மீது குண்டாஸ்

நாமக்கல்:பள்ளிப்பாளையம் அடுத்த ஐந்துபனையை சேர்ந்தவர் சசிக்குமார், 30; இவர், கடந்த, 26ல், காடச்சநல்லுார் பஸ் ஸ்டாப் அருகே நின்றுகொண்டு, அந்த வழியாக சென்ற அன்பழகன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக, பள்ளிப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.புகார்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், சசிக்குமாரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது, 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் உமா, சசிக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை