உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குட்கா பறிமுதல் 2 பேர் கைது

குட்கா பறிமுதல் 2 பேர் கைது

குட்கா பறிமுதல்2 பேர் கைதுதிருச்செங்கோடு, செப். 29-திருச்செங்கோடு அடுத்துள்ள ஒக்கிலிப்பட்டி கலரங்குட்டை பகுதியில், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 80 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.திருச்செங்கோடு அடுத்த ஒக்கிலிப்பட்டி, கலரங்குட்டையை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வசந்தகுமார் வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கு சோதனை நடத்தினர். அப்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த, 80 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், ஒக்கிலிப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார், 40, கருவேப்பம்பட்டியை சேர்ந்த அப்துல்ரகுமான், 42, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ