உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பொம்மசமுத்திரம் ஏரிக்கு தண்ணீர் வரத்தால் மகிழ்ச்சி

பொம்மசமுத்திரம் ஏரிக்கு தண்ணீர் வரத்தால் மகிழ்ச்சி

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் - காரவள்ளி சாலையில், 40 ஏக்கர் பரப்பளவில் பொம்மசமுத்திரம் ஏரி உள்ளது. கடந்தாண்டு கொல்லிமலையில் போதிய மழையில்லாததால், இந்த ஏரி வரண்டு காணப்பட்டது. தற்போது கொல்லிமலையில் பெய்யும் கனமழையால், ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்-கியதை தொடர்ந்து, கொல்லிமலையில் நல்ல மழை பெய்து வரு-வதால், அங்கிருந்து வரும் பெரியாற்றில், கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இந்த தண்ணீர், காளப்பநாய்க்கன்பட்டி சாலையில் உள்ள கரு-வாட்டாறு வழியாக துத்திக்குளம் ஏரிக்கு வந்தது. தற்போது, துத்-திக்குளம் ஏரி நிரம்பி, பொம்மசமுத்திரம் ஏரிக்கு வந்துள்ளது. இந்த தண்ணீரால், பொம்மசமுத்திரம் ஏரி பாதியளவில் நிரம்பி-யுள்ளதால், ஒரு வாரத்தில் பெம்மசமுத்திரம் ஏரி முழுவதும் நிரம்பும் நிலை உள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை