உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலரில் சென்ற தம்பதியர் கீழே விழுந்ததில் கணவர் பலி

டூவீலரில் சென்ற தம்பதியர் கீழே விழுந்ததில் கணவர் பலி

சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை யூனியன் காரமங்காடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம், 42, விவசாயி. இவரது மனைவி மீனாட்சி. இருவரும் சிறுகம்பளத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, மீண்டும் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு டூவீலரில் திரும்பினர். நவக்காடு அடுத்த அமிஞ்சிக்காடு வளைவில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து இருவரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே ரத்தினம் உயிரிழந்தார். படுகாயமடைந்த மீனாட்சியை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர், அங்கு வந்த அப்பகுதி மக்கள் திரண்டு, பிக்கப் லாரி மோதி தான் தம்பதியர் கீழே விழுந்ததாகவும், அந்த வாகனத்தை பிடிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 11:00 மணி வரை நடந்த போராட்டத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், போலீசார் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால், கொல்லிமலை பாதையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி