உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மத்தியில் காங்., கட்சி ஆட்சி அமைக்கும் நாமக்கல்லில் செல்வப்பெருந்தகை பேச்சு

மத்தியில் காங்., கட்சி ஆட்சி அமைக்கும் நாமக்கல்லில் செல்வப்பெருந்தகை பேச்சு

நாமக்கல்: ''மத்தியில், காங்., கட்சி ஆட்சி அமைக்கும்,'' என, மாநில காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார்.நாமக்கல் மாவட்ட காங்., கட்சி நிர்வாகிகள் கூட்டம், நாமக்கலில் நடந்தது. கிழக்கு மாவட்ட காங்., தலைவர் சித்திக் தலைமை வகித்தார். இதில், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: கட்சியை பலப்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள், இந்த கட்சியில் பணிபுரியலாம். தெலுங்கானாவில் காங்., ஆளும் கட்சியாக உள்ளது. அந்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும். தனிப்பட்ட வெறுப்புகளை கட்சியில் புகுத்தாதீர்கள். நாம் உழைக்கவில்லை. மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. அதனால் தான் நமக்குள் இந்த ஈகோ பிரச்னை. நமது தலைமுறையில், காங்., கட்சியை ஆளுங்கட்சியாக கொண்டு வர பாடுபட வேண்டும். எல்லா மக்களுக்கும் ஏற்றார் போல் காங்., உள்ளது. பாஜ., மக்களை குழப்பி இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி வருகிறது. ஜூன், 4ம் தேதிக்கு பிறகு காங்., கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும். நாமக்கல்லில் முதன்மை கட்சியாக காங்., வரவேண்டும்.இவ்வாறு பேசினார்.சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மாநில செய்தி தொடர்பாளர் செந்தில். நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் செல்வக்குமார், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் பாலாஜி, முன்னாள் எம்.பி., ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ