மேலும் செய்திகள்
ஆடு விற்பனை அதிகரிப்பு
29-Apr-2025
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிப்பட்டி கெஜகோம்பையை சேர்ந்தவர் பழனிமுத்து, 45; இவர் கடந்த, 4ல் எருமப்பட்டி அக்னி மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சிக்கு தீர்த்தக்குடம் எடுத்த வர, தனக்கு சொந்தமான லாரியை கோவில் அருகே நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, லாரியில் இருந்த பேட்டரி திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதேபோல், சில தினங்களுக்கு முன் பொன்னேரி கைகாட்டியில் குமார் என்பவரது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரின் பேட்டரி திருடப்பட்டிருந்தது. எருமப்பட்டி பகுதியில் அடிக்கடி பேட்டரி திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே, எருமப்பட்டி போலீசார், பேட்டரி திருடும் மர்ம நபர்களை கண்காணித்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29-Apr-2025