உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கேட்டு ஜாக்டோ--ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கேட்டு ஜாக்டோ--ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ--ஜியோ அமைப்பினர், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ--ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர், அருள்செல்வன், அங்கமுத்து, முருகேசன், வீராசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் காலத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படும் என, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வுகள் பெற்றிடவும் கட்டாய ஆசிரியர் தகுதித்தேர்வு திணிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும். பணிமூப்பின் படி பதவி உயர்வு வழங்க வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எம்.ஆர்.பி., செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அரசு தொழிற்பயிற்சி நிலைய ஊழியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். மேலும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ