மேலும் செய்திகள்
பயணிகள் வருகை குறைந்த கொடைக்கானல்
07-Feb-2025
சேந்தமங்கலம்,: நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. இந்த மலைக்கு, விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், இங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மருவிகளில் குளித்து மகிழ்வர்.பின், பழமைவாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில், எட்டிக்கையம்மன் கோவில், மாசி பெரியசாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.இந்நிலையில், நேற்றும், இன்றும் மாசி முதல் முகூர்த்த தினம் என்பதால், கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வரத்து வெகுவாக குறைந்தது.இதனால், மாசிலா அருவி, நம்மருவி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
07-Feb-2025