மேலும் செய்திகள்
வக்கீல் சங்கத்தினர் 2ம் நாள் ஆர்ப்பாட்டம்
18-Sep-2025
நாமக்கல், அசென்னை நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள், பார் அசோசியேசனில் அத்துமீறி நுழைந்து வக்கீல் ராஜீவ்காந்தி என்பவரை தாக்கியுள்ளனர். இது குறித்து, வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இதுவரை எப்.ஆர்.ஐ., பதிவு செய்து மர்ம நபர்களை கைது செய்யவில்லை. வக்கீலை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும், வக்கீல் பாதுகாப்பு சட்ட மசோதாவை நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றக் கோரியும், நாமக்கல் மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்றங்களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் வக்கீல்கள் சங்கம் சார்பில், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் முன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். திரளான வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, தாக்குதலை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
18-Sep-2025