மதுபானம் பதுக்கி விற்றவர் கைது
சேந்தமங்கலம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை தொடர்ந்து, சேந்தமங்கலம் பகுதியில் சில மாதங்களாக கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மீண்டும் தற்போது பல இடங்களில் சந்து கடைகளில் மது விற்பனை நடக்கிறது.இதேபோல், சேந்தமங்கலம் டவுன் பஞ்., காமராஜபுரத்தில் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து, இரவு நேரங்களில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக, மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சக்கரபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ., துரைசாமி மற்றும் போலீசார், காமராஜபுரத்தில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, பிரபு, 40, என்பவரது வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்து, குடிக்க அனுமதித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 45 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.