உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மா.திறனாளிகள் தின உறுதிமொழி ஏற்பு

மா.திறனாளிகள் தின உறுதிமொழி ஏற்பு

மோகனுார்: மோகனுார் வட்டார வள மையத்தில், 'உலக மாற்றுத்திறனாளிகள் தினம்' கொண்டாடப்பட்டது. மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருணாசலம் தலைமை வகித்தார். சிறப்பு பயிற்றுனர் ஆனந்தகுமார் வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாலுசாமி முன்னிலை வகித்தார். ஆண்டுதோறும், டிச., 3ல், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நடந்த நிகழ்ச்சியில், 'ஒற்றுமையை வளர்ப்போம்' என உறுதிமொழியை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஏற்கப்பட்டது.* திருச்செங்கோடு வட்டார வள மையத்தில், மேற்பார்வையாளர் சந்திரசேகர் தலைமையிலும், ப.வேலுார் தாலுகா, கபிலர்மலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாண்டமங்கலம் பஞ்., தொடக்கப்பள்ளியில், சிறப்பு பயிற்றுனர்கள் அருள்குமார், சரஸ்வதி, இயன்முறை மருத்துவர் விஜயபிரியா தலைமையில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி