பராமரிப்பு இல்லாத மழைநீர் சேமிப்பு தேக்கம்
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட புதுப்பாளையம் பஞ்., ராகவானந்த நகர் பகுதியில் ஓடை செல்கிறது. சுற்று வட்டாரத்தில் மழை பெய்தால், இந்த ஓடையில் தண்ணீர் செல்லும். ஓடையின் குறுக்கே நீர்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. மழை பெய்து தண்ணீர் வந்தால், இந்த நீர் தேக்கத்தில் தேங்கி இருக்கும்.இதனால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். ஆனால், பல மாதங்களாக இது பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், முட்புதர் வளர்ந்துள்ளது. மேலும், குப்பை கொட்டப்பட்டு, கழிவுநீர் தேங்கி, சேறு, சகதியுமாக காணப்படுகிறது.எனவே, ஓடையில் வரும் மழை நீரை முழுமையாக சேமிக்கும் வகையில், நீர்தேக்க பகுதியை துார்வாரி, முட்புதர்களை அகற்றி பராமரிப்பு செய்ய, பள்ளிப்பாளையம் யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.