உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மினிபஸ்கள் வழக்கம்போல் இயங்கும்

மினிபஸ்கள் வழக்கம்போல் இயங்கும்

நாமக்கல்; தமிழகத்தில் தனியார் பஸ்கள், இன்று இரவு முதல், நாளை வரை இயங்காது என, பஸ் உரி-மையாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மினி பஸ் உரிமை-யாளர் சம்மேளனத்தின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சம்மேளனத்தின் மாநில தலைவர் கொடியரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:'தமிழ்நாட்டில் தனியார் பஸ்கள் செப்., 29 இரவு முதல் 30 வரை இயங்காது என அறிவிக்கப்பட்-டுள்ளது. இந்த அறிவிப்பிற்கும் தமிழகத்தில் இயங்கி வரும் மினி பஸ்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பொதுமக்கள் மற்றும் பய-ணிகளின் நலனை கருத்தில் கொண்டும், தமிழ்-நாடு மினி பஸ் உரிமையாளர்கள் சம்மேளன மாநில உயர்மட்ட குழுவின் விரிவான ஆலோச-னையின் முடிவின்படியும் இந்த முடிவு எடுக்கப்-பட்டுள்ளது. மேற்படி வேலைநிறுத்த நாட்களில், தமிழ-கத்தில் உள்ள அனைத்து மினிபஸ்களும் தடை-யின்றி தொடர்ந்து முழுமையாக இயங்கும். பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் எவ்-வித சிரமமும் இன்றி வழக்கம் போல் தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை