உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.7 லட்சம் மதிப்பிலான மொபைல்கள் மீட்பு

ரூ.7 லட்சம் மதிப்பிலான மொபைல்கள் மீட்பு

நாமக்கல், நாமக்கல் பகுதியில், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 40க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.நாமக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில், 2023, 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் பொதுமக்களால் தவறவிடப்பட்ட மற்றும் திருட்டு போன மொபைல் போன்களை கண்டுபிடித்து தருமாறு நாமக்கல் போலீஸ் ஸ்டேசன்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, நாமக்கல் கிரைம் பிரிவு போலீசார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில். அதன் ஐ.எம்.ஐ., எண்களை வைத்து பல்வேறு பகுதியில் இருந்த, 40க்கும் மேற்பட்ட மொபைல்களை மீட்டனர்.அவ்வாறு மீட்கப்பட்ட மொபைல்களை நாமக்கல் போலீஸ் ஸ்டேசனில் நடந்த நிகழ்ச்சியில், நேற்று உரியவர்களிடம், இன்ஸ்பெக்டர் கபிலன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ