உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வரத்து குறைந்ததால் முருங்கை விலை உயர்வு

வரத்து குறைந்ததால் முருங்கை விலை உயர்வு

ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தையில், நேற்று தக்காளி கிலோ, 20, கத்-தரி, 50, வெண்டை, 20, புடலை, 38, பீர்க்கன், 50, பாகல், 50, சுரைக்காய், 14, பச்சை மிளகாய், 50, முருங்கை, 85, சின்ன வெங்-காயம், 52, பெரிய வெங்காயம், 28, முட்டைகோஸ், 15, கேரட், 70, பீன்ஸ், 130, பீட்ரூட், 40, வாழைப்பழம், 40, கொய்யா, 40, பப்பாளி, 30, தர்பூசணி, 20, எலுமிச்சை, 100 ரூபாய்க்கும் விற்ப-னையாகின.நேற்று ஒரே நாளில், 29,670 கிலோ காய்கறி, 9,985 கிலோ பழங்கள், 420 கிலோ பூக்கள் என மொத்தம், 40,075 கிலோ காய்-கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 17.5 லட்சம் ரூபாயாகும். சில தினங்களாக முகூர்த்தநாள் என்பதால் முருங்கை தேவை அதிகரித்தது. ஆனால், எதிர்பார்த்ததை விட வரத்து குறைவாக இருந்தாதல் முருங்கை விலை, இரண்டு மடங்கு உயர்ந்தது. கடந்த வாரம், முருங்கை கிலோ, 50 ரூபாயில் இருந்து, 65 ரூபாய் வரை விற்றது. கடந்த வெள்ளிக்கிழமை முருங்கை விலை கிலோ, 140 ரூபாய்க்கு விற்றது. நேற்று, 85 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ