உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவிரி பாலம் முன் உள்வாங்கிய தார்ச்சாலை வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுரை

காவிரி பாலம் முன் உள்வாங்கிய தார்ச்சாலை வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுரை

ப.வேலுார், நவ. 2--ஜேடர்பாளையம் அருகே, சோழசிராமணியில் காவிரி பாலம் உள்ளது. சோழசிராமணியில் இருந்து மறுகரையான ஈரோடு மாவட்டம், பாசூர் கிராமத்துக்கு சென்று வரும் பிரதான சாலையாக உள்ளது. மேலும், ப.வேலுார் அருகே, கபிலர்மலை, ஜேடர்பாளையம், சோழசிராமணி மற்றும் பல்வேறு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு செல்வதற்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தினசரி காலை, மாலை நேரங்களில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பிரதான சாலையில், நேற்று காலை திடீரென நான்கு அடி அகலம், அரை அடி ஆழம் உள்வாங்கியது. அப்பகுதி பொதுமக்கள் அந்த இடத்தை எச்சரிக்கையாக கடக்க, தாங்களாகவே முன்வந்து பேரிகார்டுகள் வைத்துள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் தார்ச்சாலை பல்வேறு பகுதிகளில் உள்வாங்கி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்வாங்கிய தார்ச்சாலை, சில மாதங்களுக்கு முன் தான் போடப்பட்டது. தற்போது, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தார்ச்சாலை உள்வாங்கியுள்ளது. இரவு நேரத்தில் இச்சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, சோழசிராமணி கிராம பஞ்., தலைவர் கோகிலாவிடம் கேட்டபோது,''தார்ச்சாலை உள்வாங்கிய விவகாரம், தற்போது தான் எனக்கு தெரிய வந்துள்ளது. தற்போது, தார்ச்சாலை உள்வாங்கிய இடம், கடந்த இரண்டு மாதத்துக்கு முன், 10 அடி நீளம், 10 அடி ஆழம் உள்வாங்கியது. அப்போது, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதியை சீரமைத்தனர். தற்போது, மீண்டும் அதே பகுதியில் உள்வாங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் தகவல் தெரிவித்து, உடனடியாக சாலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை