உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:எம்.ஆர்.பி., செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் நர்சுகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சித்ரா, சகுந்தலா ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் செல்வமூர்த்தி, மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களின் பணி நிரவல் முறையை கைவிட வேண்டும். எம்.ஆர்.பி., செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செவிலியர் மற்றும் செவிலிய போதகர் பணியிடங்கள் தொகுப்பூதிய முறையில் உருவாக்கக்கூடாது. புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள செவிலிய கல்லுாரிகளில், நிரந்தர பணியிடங்களை உருவாக்கி பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசு மருத்துவமனை செவிலியர்களை செவிலிய அலுவலர் என பெயர் மாற்றம் செய்து, பணிகளை வரன்முறைப்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை ஒரு மணி நேரம் பணிகளை புறக்கத்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்