இளம் வயது மகளிருக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு
பள்ளிப்பாளையம், சர்வதேச யோகா தினத்தையொட்டி, பள்ளிப்பாளையம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இணைந்து, நேற்று வெப்படையில் கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், இளம் வயது மகளிருக்கு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், கர்ப்பகால அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், 50 கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.பள்ளிப்பாளையம் வட்டார குழந்தைகளை வளர்ச்சி திட்ட அலுவலர் மோகனா, வட்டார மருத்துவ அலுவலர் செந்தாமரை, வட்டார மேற்பார்வையாளர், சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.