மண், நீர் பாதுகாப்பு வழிமுறை இன்று ஒருநாள் இலவச பயிற்சி
நாமக்கல் ;'மண், நீர் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ஒருநாள் இலவச பயிற்சி முகாம், இன்று நடக்கிறது' என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு, 'மண், நீர் பாதுகாப்பு வழிமுறைகள்' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சியில், மண், நீர் பாதுகாப்பு வழிமுறைகளின் முக்கியத்துவம், மண் அரிப்பை தடுத்தல், நீர் ஊடுருவலை மேம்படுத்துதல், கோடை உழவு, மழைநீரை சேகரித்தல், நீர் வளங்களை பாதுகாத்தல், மண் வளத்தை பராமரிக்கும் முறைகளான பயிர் மூடாக்கு, பயிர் சுழற்சி முறை, மண்ணில் நீரை தக்க வைக்கும் முறை, பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ப நீர் பாசன அளவு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.அதில், விவசாயிகள், விவசாய பெண்கள், ஊரக இளைஞர்கள், ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளாலாம். நாமக்கல் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள், 04286-266345 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.