உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கூடுதல் கமிஷன் வசூலிக்கும் ஆன்லைன் நிறுவனம் ஜூலை 1 முதல் உணவு வகைகள் சப்ளை நிறுத்தம்

கூடுதல் கமிஷன் வசூலிக்கும் ஆன்லைன் நிறுவனம் ஜூலை 1 முதல் உணவு வகைகள் சப்ளை நிறுத்தம்

நாமக்கல், 'கூடுதல் கமிஷன் வசூலிக்கும் ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களுக்கு, வரும் ஜூலை, 1 முதல் உணவு வகைகள் சப்ளை நிறுத்தப்படும்' என, ஓட்டல் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நாமக்கல் நகரம் மற்றும் தாலுகா ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சங்க தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார். செயலாளர் அருள்குமரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள், ஓட்டல் உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் செய்யும்போது, குறைந்தளவு தொகை கமிஷன் கொடுத்தால் போதும் என்று கூறினர்.ஆனால், தற்போது விளம்பர செலவு, டெலிவரி செலவு, ஜி.எஸ்.டி., வரி என, பல்வேறு கட்டணங்களை பிடித்தம் செய்துகொண்டு, ஓட்டல் உரிமையாளர்களுக்கு உணவுக்கான தொகையை வழங்குகின்றனர். மேலும், ஒவ்வொரு கடைக்கும் வெவ்வேறு விதமான கமிஷன் பெறுகின்றனர். 10,000 ரூபாய் மதிப்புள்ள உணவு வியாபாரத்தில், கமிஷனாக, 4,000 ரூபாய் வரை பிடித்தம் செய்கின்றனர். இதனால், ஓட்டல் உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.வரும், 30க்குள், ஆன்லைன் உணவு நிறுவனங்கள், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, கமிஷன் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும். தவறும்பட்சத்தில், வரும் ஜூலை, 1 முதல், அனைத்து ஆன்லைன் உணவு நிறுவனங்களுக்கும், உணவு வகைகள் சப்ளை செய்வதை முழுமையாக நிறுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க துணைத்தலைவர் பாலசங்கர், பொருளாளர் விக்னேஷ், இணை செயலாளர் புஷ்பராஜ், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை