உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய கார் கொடுத்து இழப்பீடும் தர உத்தரவு

புதிய கார் கொடுத்து இழப்பீடும் தர உத்தரவு

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த தொட்டியபட்டியை சேர்ந்தவர் சரவணகுமார், 43. இவர், 2020 அக்டோபரில், 20 லட்சம் ரூபாய் செலுத்தி, நாமக்கல்லில் உள்ள, 'ட்ரூ சாய் ஒர்க்ஸ்' என்ற கார் டீலரிடம், 'டாடா நெக்ஸான்' கார் வாங்கினார். வாங்கிய, 26 நாட்களில், பெயின்டிங் குறைபாடு ஏற்பட்டது; அந்த குறைபாடு சரி செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்கு பின் கொடுக்கப்பட்டது. மீண்டும் சில நாட்களில், காரின் வெளிப்புற பெயின்டிங் மாற துவங்கியது. அந்த காரை டீலரிடம் கொடுத்து, 'குறைபாடுள்ள காருக்கு பதில், புதிய கார் கொடுக்க வேண்டும்' என சரவணகுமார் கோரினார். ஆனால், கார் உற்பத்தி நிறுவனம் மறுத்தது.இதையடுத்து, கார் உற்பத்தி நிறுவனத்தின் மீதும், கார் டீலர் மீதும், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், 2024 ஜூலையில் சரவணகுமார் வழக்கு தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் நேற்று தீர்ப்பளித்தனர்.'வழக்கு தாக்கல் செய்தவருக்கு, 8 வாரத்துக்குள் அதே வகை புதிய காரை வழங்க வேண்டும். அல்லது காருக்காக செலுத்திய பணத்தை வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சலுக்காக 3 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ