உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆக்கிரமிப்பில் உள்ள புறம்போக்கு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்பில் உள்ள புறம்போக்கு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

நாமக்கல், கொண்டமநாயக்கன்பட்டி அருகே, வடுகப்பட்டியில் தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ள புறம்போக்கு நிலத்தை மீட்கக்கோரி, அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.இதுகுறித்து, அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் அடுத்த கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி தெற்குதெரு மற்றும் மேற்குதெரு பகுதியில் அரசுக்கு சொந்தமான, 90 சென்ட் நிலம் உள்ளது. இந்த புறம்போக்கு நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன், சிலர் அவர்களது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அந்த புறம்போக்கு நிலத்தை மீட்டு, நிலம் இல்லாத விதவை பெண்கள், மாற்றுத்திறனாளிகள், வீடு இல்லாத ஏழை, எளியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை