கொல்லிமலை அருவியில் குளித்து மகிழ்ந்த மக்கள்
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டு-மின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்-றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது, விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், கொல்-லிமலை முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருகி-றது. விடுமுறை நாளான, நேற்று கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. அவர்கள், நம் அருவி, மாசிலா அருவி,சிற்றருவி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா மற்றும் அறப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், மாசி பெரியசாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். மேலும், தாவர-வியல் பூங்காவில் நடந்துவரும் மலர் கண்காட்-சியை கண்டு ரசித்தனர்.கொல்லிமலையில் சுற்று பயணத்தை முடித்து-விட்டு, கீழே வரும்போது சோளக்காட்டில் உள்ள பழங்குடியினர் சந்தையில் கொல்லிமலை வாழைப்பழம், பலாப்பழம், அன்னாசி பழம் மற்றும் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்-களையும் வாங்கிகொண்டு சென்றனர்.