உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துாக்கத்தை தொலைத்த மக்கள்

துாக்கத்தை தொலைத்த மக்கள்

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம், தில்லை நகர் பகுதி குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 'டிப்டாப்' வாலிபர் ஒருவர் நோட்டமிட்டபடி சென்று, ஒரு வீட்டின் காம்பவுன்ட் சுவரில் ஏறி குதித்து உள்ளே செல்கிறார். பின் சிறிது நேரம் கழித்து, சில பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பி செல்கிறார். இதேபோல், தாஜ்நகர் அடுத்த ஸ்ரீகார்டன் பகுதியில் ஒரே டூவீலரில் வந்த, மூன்று பேர், குடியிருப்பு பகுதிக்குள் சென்று, ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டு செல்கின்றனர். இவர்களும் கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டு, சுவர் ஏறி குதித்து தப்பி செல்கின்றனர். இந்த காட்சிகள் அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகளை, அப்பகுதி மக்கள், பள்ளிப்பாளையம் போலீசில் கொடுத்து புகாரளித்துள்ளனர். மர்ம நபர்கள் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் துாக்கத்தை தொலைத்து, பீதியில் உள்ளனர்.*************************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை