உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிபின் ராவத் பலியான விபத்துக்கு விமானியின் தவறே காரணம்

பிபின் ராவத் பலியான விபத்துக்கு விமானியின் தவறே காரணம்

புதுடில்லி : முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் விபத்துக்கு, விமானியின் தவறே காரணம் என ராணுவ நிலைக்கு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லுாரியில் நடக்கவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, 2021 டிச., 8ல், அப்போதைய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் டில்லியில் இருந்து கோவை சூலுார் விமானப்படை தளத்துக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் அவர் வெலிங்டன் புறப்பட்டார்.அப்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் பலியாகினர். இந்நிலையில், 2017 - 2022 வரையிலான ராணுவ நிலைக்குழு அறிக்கை, லோக்சபாவில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2017 - 2022 வரை 34 விமானப்படை விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இதில், குன்னுாரில் பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தும் அடங்கும். இதற்கு விமானியின் தவறே காரணம். வானிலை மாற்றம் காரணமாக தடுமாறிய விமானி, ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தினார். பின் நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது. ஹெலிகாப்டரில் இருந்த ரிகார்டரில் பதிவான விபரங்களின்படி இது தெரிய வந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
டிச 20, 2024 13:46

இவ்வளவு சீக்கிரம் காரணத்தை கண்டு பிடித்து விட்டார்களா? மத்திய பாஜக ஆட்சியில் இந்திய ராணுவத்தின் செயல்பாடு மோசமாக உள்ளது.


Sidharth
டிச 20, 2024 12:14

அப்போ போர்ட்தாஸ் சொன்னதெல்லாம் வழக்கம்போல பொய்யா


Kasimani Baskaran
டிச 20, 2024 10:46

ரேடார் இல்லாத விமானமா அல்லது ராடார் வேலை செய்யவில்லையா என்பதையும் சொல்லி இருக்கலாம். FDR எல்லா விபரங்களையும் பதிவு செய்து இருக்கும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 20, 2024 10:21

அப்போது சீனா மீதும் சந்தேகப்பட்டனர் ..... டீப் ரூட்டட் விசாரணை தேவை ......


அப்பாவி
டிச 20, 2024 07:47

அப்போ அந்த நேரு?


N Sasikumar Yadhav
டிச 20, 2024 08:50

கொலையான ராமஜெயத்தின் சகோதரர் நேருவை எதற்கு இழுக்கிறீர்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 20, 2024 10:22

திமுக அமைச்சரை ஏன் குறி வைக்கிறார் ????


Raj
டிச 20, 2024 07:05

2021 இல் நடந்த விபத்துக்கு இப்பொழுது தான் தெரிகிறது அதை ஓடித்த விமானி தான் காரணம் என்று. என்ன ஒரு கண்டுபிடிப்பு. 1100 நாட்கள் இதை இன்வெஸ்டிகேட் செய்ய..... கேவலம்.


வைகுண்டேஸ்வரன் V, chennai
டிச 20, 2024 08:30

ராமஜெயம், கோட நாடு, வேங்கை வயல், செ பா தம்பி இதெல்லாம் உன் கேவல லிஸ்டில் சேர்ந்ததா?


chennai sivakumar
டிச 20, 2024 06:43

To err is human


சுந்தர்
டிச 20, 2024 06:17

Investigation முடிந்து அறிக்கை வெளியிட இவ்வளவு நாட்களா?


சாண்டில்யன்
டிச 20, 2024 11:23

CAG அறிக்கைபோல லேட் லத்தீப் கெட்டதுக்கு லத்தீப் நல்லதுக்கு லஷ்மி நாராயணன்


முக்கிய வீடியோ