உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவு அடைப்பால் சுகாதார சீர்கேடு

சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவு அடைப்பால் சுகாதார சீர்கேடு

நாமக்கல்:நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில், வள்ளிபுரம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதன் எதிர் பகுதியில் புதிய இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நேரத்தில் பூங்கா சாலை, உழவர் சந்தை, பொய்யேரிக்கரை, திருவள்ளுவர் காலனி வழியாக வாகனங்களை திருப்பி விடப்படும்.இந்நிலையில், அந்த சாலையில் உள்ள தமிழ்நாடு உணவு பாதுகாப்பு கிடங்கில் இருந்து திருவள்ளுவர் காலனி வரை மெகா சைஸ் சாக்கடை அமைக்கப்பட்டு அதில் கழிவுநீர் சென்றது. தற்போது அந்த சாக்கடையில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு கிடங்கு வரை சுற்றுச்சுவரை ஒட்டிய சாக்கடையில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துள்ளன.தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரில் புழு மற்றும் கொசு உற்பத்தி கூடாரமாக மாறி துர்நாற்றம் வீசுவதோடு நிலத்தடிநீர் வெகுவாக பாதிப்படைந்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கழிவுகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !