மேலும் செய்திகள்
எம்.பி., ராஜேஸ்குமாரை பாராட்டிய முதல்வர்
23-Oct-2024
திருச்செங்கோடு: கோவை மாநகர போலீசார் சார்பில், கடந்த, இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்படும், 'போலீஸ் அக்கா' திட்டம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி, நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில், 'போலீஸ் அக்கா' திட்ட துவக்க விழா, திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனம் வளாகத்தில் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். ஐ.ஜி., செந்தில்குமார், டி.ஐ.ஜி., உமா ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்தனர். எஸ்.பி., ராஜேஷ் கண்ணன், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் கருணாநிதி, உயர்கல்வித்துறை மண்டல இணை இயக்குனர் சிந்தியா செல்வி, டி.இ.ஓ., கற்பகம், திருச்செங்கோடு டி.எஸ்.பி., இமயவரம்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
23-Oct-2024