குமாரபாளையம் அரசு கல்லுாரியில் முதுகலை மாணவர் சேர்க்கை
குமாரபாளையம், 'குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதுகலை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது' என, கல்லுாரி முதல்வர்(பொ) சரவணாதேவி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:குமாரபாளையம் அரசு கலை கல்லுாரியில், 2025-26ம் ஆண்டிற்கான முதுகலை பாடப்பிரிவில், சேர விரும்பும் மாணவர்கள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி www.tngasa.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கல்லுாரி குறியீட்டு எண்: 1031013. கல்லுாரியில் உள்ள பாடப்பிரிவுகளில் எம்.ஏ., தமிழ், 36, எம்.ஏ., ஆங்கிலம், 36, எம்.காம்., 36, எம்.எஸ்சி., கணிதம், 36, எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், 30 என, 174 இடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி, ஜூலை, 15. மேலும், தகவல்களுக்கு கல்லுாரி இணையதளமான, www.gasckpm.org மற்றும் கல்லுாரியில் செயல்பட்டு வரும், மாணவர் சேர்க்கை உதவி மையத்தை அணுகவும். மேலும், இளநிலை பாடப்பிரிவுகளுக்கு தொடர்ந்து சேர்க்கை நடந்து வரும் நிலையில், ஏற்கனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர்கள், கல்லுாரிக்கு நேரில் வந்து விண்ணப்பித்து சேர்க்கை பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.